பெண்களுக்கு திருமண வயது 21 என்பது பெண்களின் முன்னேற்றம் சிறக்கும் கரூரில் பாஜக மகளிரணி மாநில தலைவர் அதிரடி பேட்டி

  • 2 years ago
ஆயிரம் ஆண்களுக்கு, ஆயிரத்து 20 பெண்கள் உள்ளதாக ஆய்வறிக்கை உள்ளது ஆகவே தான் வயது வரம்பு சட்டம் என்றும் பெண்களுக்கு பல்வேறு முன்னேற்றங்கள் இந்திய அளவில் கொண்டுவரும் நேரம் இது பெண்களுக்கு 21 வயது திருமணம் என்பது ஒரு நல்ல விஷயம் என்றும் கரூரில் மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி நித்ய சுந்தர் அதிரடி பேட்டி

கரூரில் கடந்த மாதம் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பெற்றோரை சந்திக்க வந்த பாஜக பெண்கள் அணி மாநில தலைவி மீனாட்சிநித்யசுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்., பாரத நாட்டின் 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள் இருக்கிறார்கள். இந்திய அளவில் ஆயிரம் ஆண்களுக்கு 1020 பெண்கள் இருப்பதாக பாலின விகிதாச்சாரம் தெரிவித்துள்ளது. ஆகவே பெண்களின் முன்னேற்றம் தேவை, பொருளாராதத்தில் பெண்கள் பங்களிப்பு அதிகம். பெண்கள் பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் இருகிறது. கரூர், சேலம், திண்டுக்கல், விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. நாள் ஒன்றுக்கு 87 பெண்கள் பாலியலால் பாதிக்கப்படுகிறார்கள். 2014 வருடத்தை காட்டிலும், 2014 ஆண்டில் 3012 வழக்கு பதிவு ஆகி இருக்கிறது. கரூரில் 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அதை விட கொடுமை இன்னும் நீதி கிடைக்கவில்லை. தர்மத்திற்கு கட்டுப்பட்டு உண்மையை கொண்டு வர வேண்டும், காவல் துறை, ஆட்சியாளர் மீது நம்பிக்கை வைக்கிறோம். கல்வி, மருத்துவம், பாதுகாப்பு இவற்றை தாண்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு இப்பிரச்சினைகளை கையாள வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகள் 60% இருக்கிறார்கள், அவர்கள் பங்களிப்பு அதிகம் இருப்பதால் அவர்களுக்கும், நாட்டுக்கும், பொருளாதாரத்திற்கும் நல்லது. 21 வயது தான் திருமண வயது என்பது அவசியம். சிறுவயதில் திருமணம் என்பதனை கடந்து பெண்களின் 21 வயது என்பது பெண்களின் முன்னேற்றத்திற்கு நல்ல ஒரு முன்னேற்றம் ஆகும், ஆகவே திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டம் மட்டுமே தீர்வு ஆகாது, பள்ளி அளவிலும், மாற்றுத் தீர்வு வேண்டும், இதன் மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. 3014 பாலியல் குற்றங்களின் பின்னனியில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. கல்வி முறையை மாற்றம் செய்ய வேண்டும். காவல் துறையினர் மக்களின் நண்பர்கள் என்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் அசிங்கப்பட்டு, சமுதாயத்திற்காக விரகத்திக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மக்களுக்கு இன்னும் நண்பர்களாக இருக்க வேண்டும். தமிழகத்தில் பாலியல் குற்றங்களுக்கு ஆளானவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களிடம் கேட்டறிந்து வருகிறோம். எல்லாதவிதமான நம்பிக்கை தரக் கூடிய கல்வி முறையை தர வேண்டும். கல்வி முறையை மாற்றம் வேண்டும், தனிநபரை பாதுகாக்க வேண்டிய கல்வியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் காவல்ர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மனநிலையில் இருக்கிறவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் காவல்துறை நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

பேட்டி : மீனாட்சிநித்யசுந்தர் - பாஜக மாநில மகளிர் அணி தலைவி