கோவை - வால்பாறையில் சிறுத்தை புலி வேட்டையாடும் வைரல் வீடியோ.

  • 2 years ago
கோவை மாவட்டம் வால்பாறை- ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யானை சிறுத்தை, புலி, கரடி, மான்,காட்டுமாடு மற்றும் அபூர்வ பறவையினங்கள் உள்ளன, வால்பாறை பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் வனத்தை விட்டு வெளியேறும் புலி மற்றும் சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதியில் புகுந்துவேட்டையாடி வருகின்றன, வனத்துறையினர் வால்பாறை பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைத்து வனவிலங்குகள் நடமாட்டம் கண்காணித்து பொதுமக்களுக்கு இரவில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்,நேற்று இரவு காரில் வால்பாறை சென்ற சுற்றுலா பயணிகள் கவர்க்கல் பகுதியில் சாலையில் சிறுத்தை இருப்பதை கண்டு வாகனத்தை நிறுத்தி சிறுத்தை தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்த வண்ணம் உள்ளபோது சாலையில் இருந்த சிறுத்தை திடீரென வனப்பகுதிகள் பாய்ந்து கேழை ஆட்டை பிடித்து வேட்டையாடும் வீடியோவைபடம் பிடித்துள்ளனர், தற்பொழுது வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது, மேலும் வனத்துறையினர் கூறும் பொழுது வால்பாறை சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளது.

Recommended