#chithiraitv #அரசியலில் மோடிக்கு மிகப்பெரிய அடி | விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடி |

  • 3 years ago
விருதுநகரில் செய்தியாளர்களை சந்திந்த விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதன் மூலம் ஆணவ மோடி அரசுக்கு மிகப்பெரிய அடி என்றார். மேலும் விவசாயிகள் போராட்டம் செய்தும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் செய்தும் ஏற்றுக்கொள்ளாத மோடி அரசு இன்று உத்தரப்பிரதேச தேர்தல் வருகின்ற நேரத்தில் மாற்றம் செய்திருக்கிறார் என விமர்சனம் செய்த மாணிக்கம் தாகூர் எம்.பி. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது என்பது அரசியலில் மோடிக்கு மிகப்பெரிய அடி என்றார். மேலும் வேளாண் சட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்வதில் அரசுக்கு தோல்வி ஏற்பட்டு இருக்கிறது என்று உண்மையை ஒப்புக்கொண்ட மோடியை மனதார பாராட்டுகிறோம் என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வைகை புயல் வடிவேல் இல்லாத குறையை தீர்த்துக் கொண்டிருக்கிறார் என விமர்சனம் செய்தார். மத்திய அரசைப் பொறுத்தமட்டில் வேளாண் பொருட்களை வாங்குகிற அதிகாரம் பெரும் பணக்காரர்களிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது என்றார். மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடியதன் விளைவாக வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இன்றும் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்றார்.
விவசாயிகள் தங்களுடைய பொருட்களை யாரிடம் விற்க வேண்டும் யாரிடம் விற்கக் கூடாது என் நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரம் இன்றும் விவசாயிகள் கையில் உள்ளது என்றார். வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது என்றார். அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் சொல்ல இருக்கிறார்கள். மேலும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வாங்கித் தருவதற்காக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார். பாமக வன்னியர் சங்கத்தின் ஆதரவு எப்போது எல்லாம் இருந்து இருக்கிறதோ அப்போதெல்லாம் பாமக வெற்றி பெற்றிருக்கிறது எனவும் தற்போது வன்னியர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் பாமக தொடர்ந்து தோல்வியைத் தழுவுவது என்றார். மேலும் வன்னியர் மக்களின் ஆதரவை பெறுவதற்காக பாமக ஜெய்பீம் படத்தை கையில் எடுத்திருக்கிறது என விமர்சனம் செய்தார் . ஜெய்பீம் படம் என்பது ஒரு சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களை பற்றி பேசும் படம் அதில் இன்னொரு சமூகத்தை கொண்டு வந்து தங்களுடைய அரசியல் லாபத்துக்காக அன்புமணியும் ராமதாசும் பேசுவது வருத்தத்துக்கு உரியது என்றார்

Recommended