கண்மாயில் உள்ள நீரை இரவு நேரத்தில் மீன் வளர்ப்பாளர்கள் திறந்து விடுவதால் நடவு செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

  • 3 years ago
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன் பட்டியில் உள்ளது புதுக்கண்மாய். இந்த கண்மாயை நம்பி 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனத்திலும், நிலத்தடி நீரை கொண்டு 1000த்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் நிறைந்த நிலையில் தொடர்ந்து கோடை மழையிலும் நீர் வரத்து வந்து கண்மாயில் மீண்டும் நீர் நிறைந்தது. இந்நிலையில் கண்மாயில் மீன் வளர்பாளர்களின் குத்தகை காலம் வரும் 25ஆம் தேதியுடன் முடிவடைவதால் கண்மாயில் வளர்ந்துள்ள மீன்களை பிடிக்க கடந்த ஒரு மாதமாக கண்மாயில் இருக்கும் நீரை இரவு நேரங்களில் திறந்து விட்டு வினாக ஆற்றில் செல்லும் விதமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் கண்மாய் நீரை நம்பி 500க்கும் மேற்பட்ட ஏகரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து பெரியகுளம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் பல முறை புகார் கொடுத்தும் கண்மாயில் நீர் திறந்து விடுவதை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காது மீன் வளர்பாளர்களுக்கு துணை போவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கண்மாயில் உள்ள நீரை பாதுகாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Recommended