#BOOMINEWS | இராஜபாளையம் சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் மீது JCB வாகனம் ஏற்ற முயற்சியா ? மக்கள் அச்சம் |

  • 3 years ago
இராஜபாளையத்தில் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட நகை கடனை தமிழக அரசு அறிவித்தது போல் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் .ஜேசிபி வாகனத்தை வைத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது ஏற்றுவது போல் வாகனத்தை இயங்கியதால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் சாலையில் இராஜபாளையம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் தங்க நகை மீது கடன் வாங்கியுள்ளனர். தமிழக அரசு தற்போது கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட தங்க நகை கடன் தள்ளுபடி ஆகும் என அறிவித்ததை அடுத்து இந்த வங்கியிலும் வைக்கப்பட்டு நகைகள் தள்ளுபடி செய்ய வேண்டும் தங்களுக்கும் ஆதார் எண் தகவல்களை சேகரித்து தங்கள் நகைகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . சாலை மறியலின் போது அந்த வழியே வந்த வந்த ஜேசிபி வாகனம் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது ஏற்றுவது போல் நிற்காமல் வந்து அருகில் வந்து வாகனத்தை நிறுத்திய ஓட்டுனரனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் உயிர் பயத்துடன் அமர்ந்திருதனர் அந்த வழியே வந்த 2 பேர் ஓட்டுனரை சத்தம் போட்டு பொதுமக்களை எழுந்து போக சொல்லி வாகனத்தை கடத்தி விட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வாகனத்தை ஏற்ற வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உங்களுக்கு நகை கடனுக்கு அரசிடம் உத்தரவு வரும் வரை காத்திருக்க வேண்டும் என கூறியபோதும் அதை ஏற்காத பொதுமக்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் தமிழக அரசு கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள அனைத்து வங்கியில் உள்ள நகைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் இதுபோன்று பாரபட்சம் செயல்களில் ஈடுபடக்கூடாது என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்

Recommended