கோவை மாவட்டம் பேரூர் பகுதியை யொட்டிய வடிவேலாம்பாளையம் கிராமத்தின் பெயரைச் சொன்னால் பலருக்கு கமலாத்தாள் பாட்டிதான் நினைவுக்கு வருவார். ஒரு ரூபாய்க்கு அவர் விற்கும் ஆவி பறக்கின்ற இட்லி எல்லோரையும் வசீகரித்துவிட்டது.
கமலாத்தாள் பாட்டி குறித்த செய்திகள் வெளிவரத்தொடங்கிய நாளிலிருந்து, வடிவேலாம்பாளையத்தைச் சுற்றி வலம் வருகிறார்கள் உணவுப் பிரியர்கள். `அத்தனை அலாதியான ருசியை, பாக்கெட்டை பதம் பார்க்காத விலையில் இத்தனை வருடங்களாக இவரால் எப்படிக் கொடுக்க முடிகிறது' என்று எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.
Be the first to comment