Trichy district temples part - 1, திருச்சி மாவட்ட கோயில்கள், பகுதி - 1

  • 3 years ago
தமிழ் நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள, திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பெற்ற கோயில்களின் தொகுப்பு.

அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்.
இது, பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம். 108 வைணவ தலங்களில் முதன்மையானது.

அருள்மிரு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்.
இது, பஞ்ச பூத தலங்களில் நீர் வடிவானது, திருவானைக்காவல். யானை, சிலந்தி வழிபட்டது. சக்தி பீடங்களில் ஞான பீட மாக விளங்குவது.

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்.
இச்சா, கிரியா, ஞான சக்தியின் வடிவமான சமயபுரம் மாரியம்மன், 12 ராசிகளின் அதிபதி.

திருச்சி மலைக்கோட்டை கோயில்கள்.
திருச்சி மலைக்கோட்டையின் அடிவாரப் பகுதியில் மாணிக்க விநாயகரும், மலையின் உச்சியில் உச்சிபிள்ளையாரும், நடுவில் சிவபெருமானே தாயாக வந்து பிரசவம் பார்த்த தாயுமானவர்.

அருள்மிகு வெக்காளியம்மன் கோயில், உறையூர்.
இது, மேற்கூரை இல்லாத அதிசய அம்மன். மண் மாரியிலிருந்து மக்களைக் காத்தவள்.

அருள்மிகு காட்டழகியசிங்கப் பெருமாள் கோயில், திருவானைக்காவல்.
விஷ்ணு நான்காவது அவதரமான நரசிம்மர்.

அருள்மிகு உத்தமர் கோயில், டோல்கேட்
மும்மூர்த்திகளும் அருள் புரியும் தலம்.

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் கோயில், திருப்பைஞ்சீலி.
இது, திருமண தடை நீக்கும் பரிகார தலம்.எமதர்மனுக்கு சிவபெருமான் மீண்டும் உயிர் தந்த தலம்.

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர்.
தலையெழுத்தை மாற்றும் சக்தி பெற்ற பிரம்மா. பதஞ்சலி மகரிஷியின் ஜீவ சமாதி அமைந்துள்ள தலம்.

அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில்.
வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவரின் ஜீவ சமாதி அமைந்துள்ள கோயில்.

அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் கோயில், திருவெள்ளரை.
108 வைணவத் தலங்களில் 4வது தலம். மார்க்கண்டேய முனிவரும் மகாலட்சுமி தாயாரும் தவம் புரிந்த இடம்.

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், குணசீலம்.
மன நல பாதிப்பை போக்கும் தலம்.
Trichy district temples. Tamilnadu.

Recommended