எங்க சங்கீதாம்மாவை இழந்துட்டோம்! கண்கலங்கும் பிரேமா..! #transkitchen

  • 4 years ago
MEENAKSHI COLLEGE OF NURSING, MANGADU, CHENNAI - http://www.mcon.ac.in/
Reporter - வெ.நீலகண்டன்
Camera - தி.விஜய்
யாரு என்னன்னு கேக்கக்கூட நாதியத்த மக்க நாங்க. சங்கீதாம்மாதான் எங்களுக்கு எல்லாமுமா இருந்தாங்க. கொஞ்சம் மனசுடைஞ்சு நின்னா, தோள்ல சாச்சுக்கிட்டு தலையைக்கோதி நீ நல்லா வருவேம்மான்னு ஆறுதல் சொல்லுவாங்க. நாங்கெல்லாம் பெத்த அம்மாக்களாலயே துரத்தப்பட்டவங்க. சங்கீதாம்மாதான் எங்களுக்கு அம்மா. அவங்களைப் பறிகொடுத்துட்டுத் தவிச்சுப்போய் நிக்குறோம்...” – கண்கலங்கப் பேசுகிறார் பிரேமா.
கோவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருக்கிறார்கள். பாலியல் தொழில், கடைகளேறி யாசகம் கேட்பது என திக்கற்றுத் தவித்த திருநங்கைகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சங்கீதா. வயது வேறுபாடின்றி எல்லாத் திருநங்கைகளும் ‘சங்கீதாம்மா’ என்று மிகுந்த மரியாதையோடு அழைக்கிறார்கள். திருநங்கைகளுக்கு முன்மாதிரியாகவும் நம்பிக்கையாகவும் இருந்த சங்கீதா, கடந்தவாரம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Recommended