அடி மேல் அடி... இடி மேல் இடி..! ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதை! #emotional

  • 4 years ago
Reporter - எம்.புண்ணியமூர்த்தி
Camera - எம்.விஜயகுமார்
சேலம் மாவட்டம், களரம்பட்டியைச் சேர்ந்த லெட்சுமிக்கு வயது 60-க்கு மேல் இருக்கும். தன் வாழ்வின் முதுமைப் பருவத்தில் அவர் அனுபவிக்கும் துயரம் சொல்லில் அடங்காதது. `அடி மேல் அடி... இடி மேல் இடி' என்று கிராமத்தில் சொல்வார்களே... லெட்சுமியின் வாழ்வு அப்படியானதுதான்.
``நாங்க நல்லா வாழ்ந்த குடும்பம்யா... இப்படி நாதியத்து நிப்போம்'னு கனவுலகூட நினைச்சுப் பாத்தது கிடையாது. இதோ நிக்கிறா பாருங்க... இவ என் பேத்தி, புத்தி சுவாதீனம் இல்லாதவ. இவளுக்கு என்னை விட்டா யாருமில்ல. ஆனா, இந்த உசுரு அவளுக்கு ஆதரவா இன்னும் எவ்வளவு நாளைக்கு இருக்கும்னு தெரியல" தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்த லெட்சுமி அதற்குமேல் பேச முடியாமல் பெருங்குரலெடுத்து அழுகிறார். தன் நிகழ்காலத்தையும் பேத்தியின் எதிர்காலத்தையும் நினைத்தாலே கண்ணீர் பெருக்கெடுக்கிறது லெட்சுமிக்கு.

Recommended