அவர்களும் நம்மை போன்றவர்களே...கை கொடுக்கும் பசியில்லா தமிழகம்!

  • 4 years ago
கைவிடப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் பசியில்லா தமிழகம்!

சாலைகளில் உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் அல்லது மனநலம் பாதிப்படைந்தவர்களை பார்த்து பெரும்பான்மையான மக்கள் அவர்களின் நிலையை நினைத்து கவலையுடன் கடந்து செல்வது உண்டு. ஆனால், `பசியில்லா தமிழகம்' என்ற அமைப்பினர் கவலையைத் தாண்டி அடுத்த நிலைக்கு சென்று அவர்களுக்கு உதவியும் செய்து வருகின்றனர். அவர்களை குளிப்பாட்டி, புத்தாடைகளை அணிவித்து, உணவு கொடுத்து காப்பகங்களில் ஒப்படைக்கின்றனர். சக மனிதர்கள் மீது அன்பு வைத்து அவர்களுக்கு உதவி செய்யும் பசியில்லா தமிழகத்தினரின் சேவைகள் தொடர நாமும் வாழ்த்தலாமே!!

- பா.காளிமுத்து



#CoronaVirus #Lockdown

Recommended