"எங்க தல தோனி இல்ல...அதான் மேட்ச் ஸ்லிப் ஆயிடுச்சு"!

  • 4 years ago
2019 சீசனில் சேப்பாக்கம் மண்ணில் சிஎஸ்கே தோற்றதில்லை என்கிற பெருமையை மீண்டும் ஒருமுறை காலி செய்திருக்கிறது மும்பை. கிளப் கால்பந்தில் பார்சிலோனா- ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான போட்டியை எல் கிளாசிக்கோ என்பதுபோல கிரிக்கெட்டின் எல்கிளாசிகோ எனப் புகழப்படுவது சென்னை - மும்பை போட்டி. இந்த சீசனில் ஏற்கெனவே மும்பையில் மும்பை இந்தியன்ஸிடன் சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்திருக்க, இந்த முறை சென்னை பழிதீர்க்கும் என்கிற ஆருடங்கள் பொய்யாய்ப்போனது. மிகச்சிறந்த பெளலிங் அட்டாக்கால் சென்னையை சுருட்டியது மும்பை!