திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய நபர் !

  • 4 years ago
என் வாழ்க்கை திசைமாறியதற்கு தெருவில் கிடந்த செல்போன்தான் காரணம்' என்று பல பெண்களை திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய 59 வயது `கல்யாண மாப்பிள்ளை' போலீஸாரிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்

சென்னை தாம்பரம் போலீஸ் நிலையத்தில் கண்ணீர்மல்க ஓசூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதில், `இரண்டாவது திருமணம் செய்வதாகக் கூறி தன்னிடம் இருந்த நகை, பணத்தை சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஏமாற்றிவிட்டார்' என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில், தாம்பரம் காவல் சரகத்தில் இதே மாதிரியான மேலும் இரண்டு புகார்கள் போலீஸாருக்கு வந்தன. இதனால் போலீஸார் உஷாராகினர். உதவி கமிஷனர் அசோகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சையது, கணபதி மற்றும் போலீஸார் தலைமையிலான தனிப்படை டீம், திருமணம் செய்வதாகக் கூறி பெண்களை ஏமாற்றிவரும் நபரைத் தேடினர். அப்போதுதான், ஒரு முக்கிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.

Recommended