ஒரு ஊரையே கலங்கடித்த ப்ரீத்தி மரணம்!

  • 4 years ago
கட்டில் முழுவதும் தூவப்பட்டிருந்த ரோஜா இதழ்களின்மேல் கிடத்தப்பட்டிருந்தது ப்ரீத்தியின் உடல். இதயம் நொறுங்கி, நெருங்கினோம். உயிரற்ற அவள் உடலும் உதிர்ந்த பூவைப்போலத்தான் கிடந்தது. இரவு முழுக்க அழுது ஓய்ந்திருந்த வீட்டில் நாம் நுழைந்ததும் திடீர் அலறல்... ``அய்யோ தம்பி... எம் மகள பாருங்க தம்பி... போன வருஷம் எம் பொண்ணைப்பத்தி ஆனந்தவிகடன்’ல பெருமையா எழுதினீங்களே... உங்க பொண்ணு பெரிய ஆளா வருவா’னு சொல்லிட்டுப் போனீங்களே தம்பி... என்ன இப்படித் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டாளே...” என்றபடி நம்மைப் பற்றிக்கொண்டு ப்ரீத்தியின் அம்மா எழுப்பிய பெருங்குரல் நம் நெஞ்சுக்குள் இடியாய் இறங்கியது. ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி சோகத்துடன் நின்றுகொண்டிருந்தோம்.






preethi scores 471 marks plus one result

Recommended