இந்தியர்கள்தான் எங்கள் டார்கெட் கஸ்டமர்கள்!

  • 4 years ago
இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல, குறைந்தது 60,000 ரூபாய் வரை செலவு ஆகும். அமெரிக்காவின் மறுமுனையில் உள்ள சான்ஃபிரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டுமானால், 2 லட்சம் ரூபாய் வரை விமானக் கட்டணம் இருக்கும். அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல இந்தியர்களுக்கு விருப்பம் இருந்தாலும், விமானக் கட்டணம் காரணமாக அங்கு செல்வதைத் தவிர்ப்பவர்களும் உண்டு. அப்படிப்பட்ட இந்தியர்களை டார்கெட்டாக வைத்து இந்தியச் சந்தையில் குதித்துள்ளது ஐஸ்லாந்தின் `வாவ்' ஏர்லைன்ஸ். பெயருக்கேற்ற வகையில் விமானக் கட்டணமும் `வாவ்' ரகம்தான். ஆம்... டெல்லியிலிருந்து வெறும் 13,499 ரூபாயில் லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்குப் பறந்துவிடலாம்.




the cheapest airline service from india to america

Recommended