மெட்டி ஒலி டான்ஸர் சாந்தி இப்போது என்ன செய்கிறார் !

  • 4 years ago
"13 வயசுல 'கிழக்கு வாசல்' படத்தில் 'தடுக்கித் தடுக்கி' பாட்டுல குரூப் டான்ஸரா அறிமுகமானேன். அப்படியே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தின்னு பல மொழிகளிலும் மூவாயிரம் பாடல்களுக்கும் மேல டான்ஸ் ஆடியிருக்கேன். பல மொழிகளில் ஐந்நூறுக்கும் மேலான பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணியிருக்கேன். சுசித்ரா, பிரகாஷ், தருண் குமார், கல்யாண், பிருந்தா மாஸ்டர் என ஐந்து குருநாதர்களும் என் வளர்ச்சியில் பக்கபலமா இருந்திருக்காங்க. பிரபுதேவா, ராஜூ சுந்தரம் மாஸ்டர்களின் பாடல்களில் நிறைய ஆடியிருக்கேன். பிரபுதேவா மாஸ்டர் என்னை ஸ்பெஷல் டான்ஸரா நிறையப் பாடல்களுக்கு வொர்க் பண்ணவெச்சதோடு, 'என்னோட ஸ்பெஷல் டான்ஸர்'னு சொல்லிட்டே இருப்பார்.

Recommended