இந்தியர்களை கைது செய்ய வந்த பாக் வீரர்களை ! நாமே காப்பாற்றினோம் !

  • 4 years ago
படகில் இருந்த 6 பாகிஸ்தான் வீரர்களும் கடலில் விழுந்து உயிருக்குப் போராடியுள்ளனர். இந்திய மீனவர்கள் கடலுக்குள் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயற்சித்தனர். அதில், இருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. 4 பேர் கடலில் மூழ்கிவிட்டனர். இதற்கிடையேதான் அந்த இடத்துக்கு ரோந்துக் கப்பல் அரிஞ்சய் வந்தது. இந்திய மீனவர்கள் நமது வீரர்களிடம் நடந்த விபரத்தைத் தெரிவித்து, பாகிஸ்தான் கடற்படை வீரர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கோரியுள்ளனர். தொடர்ந்து பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் அரிஞ்சய் கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் இருவரும் உயிர் பிழைத்துக்கொண்டனர்.

Recommended