அமைச்சர் விஜயபாஸ்கரை துளைத்தெடுத்த வருமானவரி அதிகாரிகள்!

  • 4 years ago
7-ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கிய வருமானவரிச் சோதனை இரவு 12 மணியை தாண்டியும் நடந்தது. அதிகாரிகள், கேள்வி மேல் கேள்வி கேட்டு விஜயபாஸ்கரை துளைத்து எடுத்தனர். விஜயபாஸ்கர் சளைக்காமல் பதில் கொடுத்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விஜபாஸ்கர் ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் என்று ஏராளமானோர் விடிய விடிய அவரது வீட்டு முன்பு கூடியிருந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

Recommended