ஓ.பி.எஸ் உத்தமரா ? பாகம் 3

  • 4 years ago
ஜெ. அணியும் ஜா. அணியும் இணைந்த பிறகு, அ.தி.மு.க என்ற மிகப்பெரிய அரசியல் கட்சி ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவின் கரங்களுக்குள் சரணாகதி ஆனது. காலம் அப்படி ஒரு நிலையை உருவாக்கி வைத்தபோது, எம்.ஜி.ஆரை மட்டுமே பூஜித்து, எம்.ஜி.ஆரை மட்டுமே நேசித்து, எம்.ஜி.ஆருக்காகவே அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தவர்களுக்கு ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. அவர்கள் எடுத்த முடிவில் தள்ளாட்டம் இருந்தது. சைதை துரைசாமி, காளிமுத்து, ஆர்.எம்.வீரப்பன், கம்பம் செல்வேந்திரன், போன்றவர்களால் உடனடியாக ஜெயலலிதாவின் தலைமையை ஏற்க முடியவில்லை. எதிர் நீச்சல் போட்டுப்பார்த்தனர். கரையேற முடியவில்லை. ஆனால் பன்னீர் செல்வம் அந்தத் தவறைச் செய்யவில்லை. யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அவர்களுக்கு விசுவாசியாக மனதளவிலேயே தன்னை மாற்றிக் கொண்டார். ஜெ. தலைமையை ஏற்றுக்கொண்ட பன்னீருக்கு, அக்னீப் பரிட்சையாக அமைந்தது 91-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பெரியவீரனுக்கு தீயாய் வேலை பார்த்தார் பன்னீர்.

Recommended