பட்டினத்தார் வரலாறு

  • 4 years ago
தெய்வச் செந்தமிழ்த் திருநாட்டில் தோன்றித் துறவறம் வளர்த்த பெரியாருட் சிறந்தவர் இருவர். ஒருவர் பட்டினத்துப் பிள்ளையார்; மற்றொருவர் அன்னார் சீடர் பத்திரகிரியார். பட்டினத்தார் என்னும் பெயரைச் சிலர் பட்டணத்தார் என்று சொல்லுகிறார்; எழுதுகிறார். அது தவறு. இவ்விரு பெரியார் துறவு நிலையை ஸ்ரீ தாயுமான சுவாமிகள் "பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் - ஆருந் துறக்கை யரிதரிது" என்றும், "ஒட்டுடன் பற்றின்றி யுலகைத் துறந்தசெல்வப் - பட்டினத்தார் பத்ரகிரி பண்புணர்வ தெந்நாளோ" என்றும் விதந்தோதியிருத்தல் காண்க. இத் துறவறத்தார் இருவரும் தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வதிந்திருக்க வேண்டு மென்று ஆராய்ச்சிக்காரர் கூறுப.
நன்றிகளுடன்
உமர்