சங்கத்தமிழும் நமதேதான் சரித்திரபழமையும் நமதேதான் போதிதர்மனும் நம் இனம் தான் அங்கோர்வாட்டும் நமதே தான் கற்கோவில்களும் திரு குறளும் சொல்லாமல் சொல்லுது நம்பெருமை !
நேற்றைய சரித்திரம் நமதேதான் ...! இன்றைய சரித்திரம் யார் கையில் ...? எவரிடம் இருந்தால் நமக்கென்ன எழுவோம் அலையாய் வா தமிழா !
ஒவ்வொரு முனையிலும் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு வியப்பிலும் ஓரிடம் நமக்காய் பெறுவோம்வா ..!
யாதொரு இடத்திலும் யாதுமாகி அவனியில் நாமே அனைத்துமாகி
காற்றாய் இருக்கின்றாய் தமிழா ! உயிர் காற்றாய் இருக்கின்றாய் தமிழா !
காற்றாய் இருக்கின்றாய் தமிழா ! உயிர் காற்றாய் இருக்கின்றாய் ! தமிழா !!!
Be the first to comment