ஒரே நாடு ஒரே வங்கியா..? பல,பொதுத்துறை வங்கிகள் இணைப்பு !

  • 5 years ago
ஒரே நாடு ஒரே வங்கியா..? பல,பொதுத்துறை வங்கிகள் இணைப்பு !
பல பொதுத்துறை வங்கிகள் ஒன்றாக இணைப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் பணம்புழக்கம் குறைந்துள்ளதால், மக்களின் நுகர்வு குறைந்துள்ளது. அதனால் உணவுத்துறை மற்றும் ஆட்டோமொபைல் துறையில் பல்லாயிரம் பேர் வேலையிழந்தனர். இந்நிலையில் இதற்கு மத்திய அரசு சமீபத்தில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.


அதில், பஞ்சாப் நேஷனல் வங்கி ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைகிறது. ரூ. 17.95 லட்சம் கோடி மதிப்புடன் இது நாட்டின் இரண்டாவது பொதுத்துறை வங்கியாக இருக்கும்.


கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி ஒன்றாக இணைகிறது. இது ரூ. 15.20 லட்சம் கோடி மதிப்புடன் நாட்டின் நான்காவது மிகப்பெரிய பொதுத்துறை இருக்கும்.

இந்தியன் வங்கியுடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. ரூ.8. 08 லட்சம் மதிப்புடன் நாட்டின் 4வது பொதுத்துறை வங்கியாக இருக்கும்.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா பேங்க், கார்பரேசன் பேங்க் மற்றும் கார்பரேசன் வங்கி ஒன்றாக இணைக்கப்படுகிறது. நாட்டின் 5 வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது இருக்கும் என்று இருக்குமென்று தெரிவித்தார்.

Recommended