Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
வேலூர் மாவட்டம் இகுடியாத்தம் அருகேயுள்ள தட்டான் குட்டையில் மின்சார உயர் கோபுரங்கள் அமைந்துள்ளது இப்பகுதியில் மர்ம நபர் ஒருவர் மின் கம்பிகளை திருடுவதற்காக அதனை துண்டித்துள்ளார் மின் கம்பிகளை துண்டித்து கீழே வைத்துவிட்டு மேலும் உயர் அழுத்த மின் கம்பிகளை திருடுவதற்காக அதனை துண்டிக்க முயன்றுள்ளார் அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை பொதுமக்கள் மீட்டு குடியாத்தம் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் குடியாத்தம் மேல் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த ஜமால் என்பதும் ஏற்கனவே மின் கம்பிகளை திருடி விற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து படுகாயமடைந்த ஜமாலை காவல்துறையினர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து வழக்குபதிவு செய்து மின் கம்பிகள் திருடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர் மின் கம்பிகளை திருட முயன்ற திருடன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A man who tried to steal high-pressure wires in a tattan kutti near the settlement was electrocuted

Category

🗞
News

Recommended