ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி- வீடியோ

  • 5 years ago
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் வேலூர் மாவட்ட துணை செயலாளர் கணபதி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட செயலாளர் ரவி துவக்கி வைத்தார் .இதில் வேலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 1000 மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரஜினி ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இப்பேரணியில் மழைநீர் சேமிப்பு நிலத்தடி நீர் சேமிப்பு பிளாஸ்டிக் தவிர்ப்பு தலைக்கவசம் அணிய வேண்டும் என பல்வேறு வாசகங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர் பின்னர் கடைசியாக ஜின்னா மேம்பாலம் அருகே பேரணி நிறைவு செய்தனர்.அப்போது 5 டிராக்டர் மற்றும் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 கேன்களில் குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

des : Awareness rally on rain water storage on behalf of Waniyambadi Rajini People's Forum...

Recommended