சிறுவர் இலக்கியப் படைப்பாளி விழியன் உமாநாத் அவர்களுடனான உரையாடலில் சிறுவர்களை எப்படி வாசிப்பின் வாசலில் கொண்டு நிறுத்துவது என்பதற்கான பல்வேறு உபாயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் வாசிப்பைக் காட்டிலும் காணொளிகள் மூலம் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் சிறுவர்களிடையே அதிகரித்திருந்தாலும் வாசிப்பை நேசித்தால் மட்டுமே அவர்களது கற்பனா சக்தியைத் தூண்ட முடியும் என்பதோடு அவர்களது மகிழ்ச்சிக்கும் முழு உத்தரவாதம் அளிக்க முடியும் என்ற முடிவுக்கு வர வேண்டியதாகியிருக்கிறது. விழியனுடனான முழு நேர்காணல் இது. பார்த்து விட்ட்டு வாசகர்கள் தங்களது கருத்துக்களையும் பகிர மறக்க வேண்டாம்.
விருந்தினர்: எழுத்தாளர், சிறுவர் இலக்கியப் படைப்பூக்க தன்னார்வலர்: விழியன் உமாநாத் செல்வன் | Writer, Child Literary Volunteer Vizhiyan Umanath Selvan
Be the first to comment