பட்ஜெட் குடும்பத்திற்கு மின்சார கட்டணம் என்பது எப்போதும் பெரிய பிரச்சனை தான், குறிப்பாக நகரங்களில் வாழும் மக்களுக்கு. இந்நிலையில் மின்சார கட்டணத்தை குறைக்க சூப்பர் ஐடியா உங்களுக்காக.
1. LED TV பயன்படுத்திய உடனேயே OFF செய்துவிடுங்கள். இதேபோல் TV-யின் backlight-W 45-50 ஆக குறைத்திடுங்கள்.
2. எப்போதும் Fan-ஐ குறைந்த வேகத்திலேயே வைத்து பழகிக் கொள்ளுங்கள். இதனால் வெயில் காலத்தில் கூட குறைந்த வேகமே போதுமானதாக இருக்கும்.
3. CFL டியூப் லைட்டுக்கு பதிலாக LED பல்பு-ஐ பயன்படுத்துங்கள். இது அதிகளவிலான மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.
4. மின்சாரத்தில் இயங்கும் water heater-ஐ விடவும் Solar Water Heater-ஐ பயன்படுத்துங்கள்
5. பிரிட்ஜ்-இல் இருக்கும் உணவை microwave-வில் சூடு செய்யும் முன் 10 நிமிடம் முன்பே வெளியில் வையுங்கள். இதனால் சிறிது நேரத்திலேயே சூடு ஆகிவிடும்.