Skip to playerSkip to main content
  • 6 years ago
எனக்கு என் அப்பா தான் முக்கியம்..விஷாலை வறுத்தெடுத்த வரலட்சுமி..! | Vishal | varalakshmi Sarathkumar |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணி இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறது.


இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலமையில் ஐஷரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் சுவாமி ஷங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். இந்த இரு அணிகளும் கடுமையான போட்டியுடன் மோதுகின்றனர்.


இந்நிலையில் பாண்டவர் அணி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வீடியோ ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாண்டவர் அணி எதற்காக தேர்தலில் போட்டியிட்டது. சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் பதவியை துஷ்பிரயோகம் செய்தனர். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. இந்த வீடியோவை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.


இதற்கு நடிகை வரலக்‌ஷ்மி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது, “வீடியோவை பார்த்த பிறகு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலுமாக போய்விட்டது” என்றார்.

#Vishal #varalakshmi #Tamilcinemanews
Be the first to comment
Add your comment

Recommended