Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சியின் வேட்பாளராக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்குகள் சேகரிக்கும் வகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்இ சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய அவர்இ ஏழைஇ எளிய மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்திற்கு திமுக.வினர் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்றதால் பணம்வழங்க முடியவில்லை. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும்இ முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி எவ்வளவோ சதி செய்தும் வீழ்த்த முடியாத அதிமுக கட்சியை அவரது மகன் ஸ்டாலினால் வீழ்த்த முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார். உடன் அமைச்சர் ராஜலெட்சுமிஇ வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் உடனிருந்தனர்

DES : Deputy Chief Minister O. Panneerselvam alleged that Stalin wanted to be the Chief Minister of Tamil Nadu.

Category

🗞
News

Recommended