Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை அண்ணாசிலை அருகே நேற்று மாலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார். அதில் அவர் பேசுகையில்... நாட்டில் ஜனநாயகத்துக்கு பேராபத்து வந்து கொண்டிருக்கிறது. மதச்சார்பின்மையை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியதாக வெளிவரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் ஒற்றுமையை பேசுவோர் எழுதுவோரை சுட்டுக் கொலை செய்யும் வகையில் மிரட்டுகின்றனர். எதிர்காலம் ரத்தக்களறியாக மாறிவிடக்கூடாது. இதை தடுத்து நிறுத்த அனைவருக்கும் கடமை உண்டு. காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மறைமுகமாக அனுமதி கொடுத்து தஞ்சையை பாலைவனமாக முயற்சிக்கின்றனர். இதற்கெல்லாம் பிரதமரை எதிர்த்து தமிழக அரசு குரல் கொடுக்க அச்சப்படுகிறது. காரணம் குட்கா, பருப்பு, ஆம்னி பேருந்து, கல்வித்துறை துணைவேந்தர் நியமன ஊழல், இதனை வைத்து மோடி அரசு மிரட்டுகின்றன. தமிழ்நாட்டில் 80 லட்சம் பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர். கல்விக் கடன்களை விவசாய கடன்களை ரத்து செய்ய மாட்டோம் எனக் கூறும் பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பல லட்சம் கோடி கடன்களை ரத்து செய்து வரிச் சலுகைகளை அளித்து உள்ளது. மாநில அரசில் உள்ளவர்கள் அதிக அளவில் கமிஷன் கேட்டதால் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வந்த பல நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டனர். தமிழ் நாடு அனைத்து துறைகளிலும் வஞ்சிக்கப்படுகிறது. ஒற்றுமை ஒருமைப்பாடு பன்முகத்தன்மை இருந்தால் தான் நாட்டில் அமைதி இருக்கும். ஆனால் பாசிச போக்குடன் நடந்து கொள்ளும் பாஜகவினர் தற்போது உள்ள அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள அடுத்த 15 நாட்களுக்குள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அனைத்து மக்களிடமும் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் எனில், அமைதி ஏற்பட வேண்டுமெனில் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் நேரு, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர், காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் டாக்டர் சந்திரசேகர், மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

des : Election Campaign General Assembly of Secular Progressive Alliance

Category

🗞
News

Recommended