Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி சேலம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார்.. அதைத்தொடர்ந்து, சேலத்தில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பார்த்திபன், முதல்வரின் சொந்த மாவட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை,பசுமை வழிச்சாலை திட்டத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து தவிக்கின்றனர், கிராமபுறத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லைநீட் தேர்வு, ஜிஎஸ்டி, கேஸ் விலை உயர்வு காரணமாக இந்த ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் எனத் தெரிவித்தார். மக்கள் விரும்பும் மாற்றத்தை திமுக தலைவரால் மட்டுமே தர முடியும் எனக் குறிப்பிட்ட பார்த்திபன், முதல்வரின் ஆட்சி அதிகாரம், பண பலத்தை ஏழையாக எதிர்த்து நின்று கூட்டணிக் கட்சிகளின் துணையோடு போராடி நிச்சயம் வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்தார்.

des : I will definitely win the fight with the alliance partners.

Category

🗞
News

Recommended