Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
1000 ரூபாயை திருட தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 6 கடைகளின் மேற்கூரையை உடைத்த வாலிபரின் வீடியோ வைரலாகி வருகிறது



தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் பல்வேறு கடைகள் உள்ளது. இரவு அந்த வணிக வளாகத்தில்உள்ள கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டரின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் அங்கு பணம் எதுவும் இல்லாததால் பொருட்களை கலைத்துபோட்டுவிட்டு அங்கிருந்த அடுத்தடுத்து உள்ள 5 கடைகளின் மேற்கூரைகளை ஒவ்வொன்றாக உடைத்து உள்ளே புகுந்த மர்ம எந்த கடையிலும் ஒரு ரூபாய் கூடகிடைக்காத நிலையில் தனியார் மருத்துவமனையின் மேற்கூரையையும் உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவை திறந்து பத்து ஏமாந்த மர்ம நபர்மருத்துவரின் டேபிளை உடைத்து அங்கிருந்த ஆயிரம் ரூபாயை எடுத்து ஒவ்வொரு நோட்டுகளாக என்னிபார்த்து பாக்கெட்டில் வைத்துகொண்டு வேறு எதுவும்கிடைக்குமா என வெகுநேரம் தேடிய வாலிபர் அங்கிருந்த சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ளார் .முகமூடி அணிந்து வந்து பல கடைகளின் மேற்கூரையை உடைத்தவாலிபர் 1000ரூபாயை திருடிசென்ற செயலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த போது இதே வணிக வளாகத்தில் இதோடு எட்டு முறைகடைகளின் மேற்கூரைகளை உடைத்து 5 ஆயிரம், பத்தாயிரம் என திருட்டு போன நிலையில் எந்த கேமராவிலும் மர்ம நபர்கள் பதிவாகாத நிலையில் இன்று1000ரூபாயை திருடிய பொழுது கேமராவில் சிக்கிய வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .



DES : The thief who broke 6 shops for 1000 rupees

Category

🗞
News

Recommended