நாட்டின் 70-வது குடியரசு தினவிழா..புதுவையில் அணிவகுப்பு Country's 70th Republic Day Parade

  • 5 years ago
நாட்டின் 70-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் காவல் துறையினர் மற்றும் பள்ளி மாணவர்களின் இறுதிஅணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
புதுச்சேரியில் வருகிற 26-ம் தேதி குடியரசு தினவிழா இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு குடியரசு தினவிழா இறுதிஅணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் காவல்தறையினர், பள்ளி மாணவ மாணவிகள், தேசியமாணவர்படை மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாணவ மாணவிகள் வீர நடை போட்டு நடந்து வந்தனர். மேலும் இதனைதொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Des : Country's 70th Republic Day Parade

Recommended