Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/22/2019
கடந்த டிசம்பர் மாதம் 22 முதல் 25 வரை விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த போட்டியில் 14 பேர் கொண்ட குழுவினர் இந்திய அணிக்கான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்தனர். அந்த வகையில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த மேகநாதன் மற்றும் நரசோதிபட்டி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகிய இருவரை இந்திய கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்தனர்.தொடர்ந்து கடந்த 12 முதல் 16 வரை தாய்லாந்து பாங்காக் பகுதியில் நடைபெற்ற தாய்லாந்து - இந்தியா இடையேயான தொடர் சுற்றில் 7 போட்டியில் 5 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் சிறந்த பந்துவீச்சாளராக மேகநாதனும் சிறந்த மட்டைப்பந்து வீரராக ஈஸ்வரனும் தங்கப்பதக்கம், மற்றும் கோப்பையை வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து வீடு திரும்பிய இருவருக்கும் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை கவுரவிக்கும் வகையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் இலங்கை இந்தியா தொடரில் இருவரும் இந்திய அணியில் பங்கேற்று விளையாட உள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் தேர்வாகி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Des: Cricket tournament between Thailand and India

Category

🗞
News

Recommended