Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (35) வெள்ளிப்பட்டறை தொழிலாளி.இவருக்கு கமலா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். வெள்ளிப்பட்டறை தொழில் சம்பந்தமாக குகை பகுதியை சேர்ந்த சாந்தாராம் என்பவரிடம் கோபிநாத் 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த பணத்திற்கு அவ்வப்போது கோபிநாத் வட்டி கொடுத்து வந்தார்.ஆனால் சாந்தாராம் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கூறி தினமும் கோபிநாத்திற்கு டார்ச்சர் செய்து வந்தார்.



இந்த நிலையில் கோபிநாத் குகையில் உள்ள மார்க்கெட் தெரு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாந்தாராம் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் கோபிநாத்தை பிடித்துக் கொண்டு அடித்து உதைத்து பணம் கேட்டனர்.இவர்களிடமிருந்து கோபிநாத் தப்பி செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் சாந்தாராம் அவரது நண்பர்களும் கோபிநாத்தை பிடித்துக் கொண்டு மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர் .

இதில் ரத்த வெள்ளத்தில் கோபிநாத் விழுந்து அலறி துடித்தார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்களை பார்த்த சாந்தாராமும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் .

இதுகுறித்து பொதுமக்கள் சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கோபிநாத்தை தூக்கி சென்று சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த கோபிநாத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கேள்விப்பட்ட சேலம் மாநகர துணை ஆணையாளர் தங்கதுரை உதவி ஆணையாளர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர் .தேடப்படும் சாந்தாராம் குகைப் பகுதியில் உள்ள மட்டன் கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். இதையடுத்து சாந்தாராம் வேலை பார்த்து வந்த மட்டன் கடை உரிமையாளர் மற்றும் சாந்தாராமின் உறவினர்களை காவலர்கள் சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். சேலத்தில் நடந்த இந்த பட்டப்பகலில் கொலை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

DES: Mattan shopkeeper who cut the worker in barber shop

Category

🗞
News

Recommended