Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தேவாலயமான கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று நடைபெற்றது. இதனால் நாகர்கோவில் செட்டிகுளம், கோட்டார், மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் தேவாலயத்திற்கு பொதுமக்கள் வந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிச்சை எடுப்பதற்காக பிச்சைகாரர்களும் வந்துள்ளனர். இதில் செட்டிக்குளம் பகுதியில் பிச்சை எடுத்து கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் பகுதியை சேர்ந்த மசானம் என்பவருக்கும் மற்றொரு 55 வயது மதிக்கத்தக்க பிச்சைக்காரருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிய நிலையில் ரோட்டோரமாக கிடந்த கம்பியால் மசானம் சக பிச்சைக்காரரின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கோட்டார் போலீசார் மசானத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். திருவிழா நேரத்தில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் சக பிச்சைக்காரர் கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Des: In the dispute over begging, the beggar was murdered by a fellow beggar.

Category

🗞
News

Recommended