கஜாவில் அரசியல் செய்யாதிங்க ஸ்டாலின் ! தமிழிசை அட்வைஸ்- வீடியோ

  • 6 years ago
ஸ்டாலின் அரசியல் பார்வையை கஜா புயலுக்கு கொண்டு வரக் கூடாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்



மதுரை விமான நிலையத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது

புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு பார்வையிட செல்கிறேன்.மத்திய சுகாதாரத்துறை விரைவாகவும் மாநில அரசுக்கு உதவி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளேன்.அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.புயலால் பாதிக்கப்பட்ட வாழை, தென்னை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாரதப்பிரதமர் காப்பீடும் உள்ளது இதற்கு தனித்தனியாக கொடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளேன்.



பாதிக்கப்படும் மக்களை அதிகாரிகள் சந்திக்கும் போது சிலர் கோவப்பட செய்வார்கள். இதை அதிகாரிகள்தான் படுத்துக்கொள்ள வேண்டும்.

அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இறங்கியுள்ளனர் முதல்வரும் உதவிகள் செய்வதாக கூறியுள்ளார்.

விவசாயம் தென்னை மரம் வாழை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.மத்திய அரசு என்ன உதவி செய்ய வேண்டுமோ ஆரம்பித்துவிட்டது.இழப்பீடு வழங்குவதில் மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு உண்டு.எந்தெந்த நேரங்களில் எந்தெந்த உதவிகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் அரசாங்கம் அந்தந்த நேரங்களில் செய்துள்ளது இது பாராட்டுக்குரியது. ஸ்டாலின் அரசியல் பார்வையை கஜா புயலுக்கு கொண்டு வரக் கூடாது என்றார்

Des: Stalin's political outlook should not be brought to the storm of the Gaza storm

Recommended