இலங்கை கடற்படையினால் அடித்து துன்புறுத்தபட்ட மீனவர்கள்- வீடியோ

  • 6 years ago
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22

பேர் இலங்கை அரசு விடுதலை செய்தது இவர்கள் மீன்வளத்துறை அதிகாரி மண்டபம் உதவி இயக்குனர் கோபிநாத்மூலம் இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தனர்.பின்னர் அவர்களை சொந்த ஊர்களுக்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் சேர்ந்த ராஜாராமன், ராஜா, லட்சுமணன், பாலையா, அருள், செல்வம் ,மாரிமுத்து, பஷீர், சுப்பிரமணியன், நாகராஜன், ராமன் உள்ளிட்ட

11 மீனவர்களும் . ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலங்காரம், உளராபாண்டி, அருள், கோபால், முருகன், ராஜபாண்டி ,ராபின்சன், ஜெயசீலன் ,ராஜாராமன், முத்துக்குமார், பாலகுமார் உள்ளிட்ட உள்ளிட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்களும், ராமநாதபுரம் மண்டபத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் மதுரை வந்து சேர்ந்தனர் .

இலங்கை அரசு மீனவர்களை 22 பேரை விடுவித்து ஒரு வாரத்திற்கு மேல் இந்திய தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட செல்வம் மதுரை விமான நிலையத்தில் பேட்டி:நாங்கள் சென்ற படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலில் பாதியில் நின்றது காற்றின் வேகத்தினால் இலங்கை எல்லைக்குள் செல்ல வேண்டியதாயிற்று.அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்தனர்.கைது செய்தது மட்டுமல்லாமல் மீனவர்கள் அனைவரையும் அடித்து மிகவும் துன்புறுத்தினர் உடனிருந்த மீனவரின் பல்லை உடைத்தனர், மீன்பிடிக்க பயன்படுத்திய வலைகளை அறுத்து கடலில் எரிந்தனர் மற்றும் எங்களின் படகுகளை சேதப்படுத்தியதாக கூறினார்.

Des: Fishermen in the airport at Madurai informed that the Sri Lankan Navy had beaten and tortured

Recommended