எலி காய்ச்சலுக்கு பெண் பலி மக்கள பீதி

  • 6 years ago
எலி காய்ச்சலுக்கு பெண் பலி மக்கள பீதி

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த தெக்கலூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி, இவரது மனைவி காந்திமதி கடந்த இரண்டு வாரமாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு இவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி காந்திமதி உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதியில் காய்ச்சல் மேலும் பரவாமல் மாவட்ட சுகாதார துறையினர் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சுகாதார சீர்கேடு குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்ததே காந்திமதி உயிரிழப்புக்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Recommended