பாகிஸ்தானின் புதிய அதிபராக தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் ஆல்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

  • 6 years ago
பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் பதவிக்காலம் வரும் 9ஆம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் ஆரீப் ஆல்வி, பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அட்சாஸ் ஆசன், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் சார்பில் மவுலானா பசல் உர் ரகுமான் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

Recommended