ஓபிஎஸை விமர்சித்த டிடிவி தினகரன்- வீடியோ

  • 6 years ago
முதல்வர் பதவி இனி தனக்கு கிடைக்காது என்ற விரகதியில் ஓ. பன்னீர் செல்வம் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தஞ்சையில் நடந்த திருமண விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் முதல்வர் பதவி இனி வாழ்நாள் முழுவதும் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற விரக்தியில் மனநலம் பாதிககப்பட்டவர் போல் பேசுகிறார் என நான் நினைக்கிறேன் என்றார். மேலும் உண்மைக்கு புறம்பான தகவலை அவர் மேடை கிடைத்ததே என்று அண்டபுழுகாக பேசுகிறார் என்றதுடன் விரக்தி மனப்பான்மையில் மனநலம் பாதிககப்பட்டவர் போல் அவர் பேசியுள்ளதில் எவ்வளவு உண்மை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் என்றார். அவரது நம்பகத்ன்மை கேள்வி குறியாக உள்ளது என்று கூறியதுடன் அவரது மனைவியே இந்த பொய்யை நம்பமாட்டார்கள் என்று டிடிவி தினகரன் கூறினார்.

Des : Oh sorry that the chief minister's office is no longer available to him. Dinvi Dinakaran said that Pannai Selvam is talking like a mental illness.

Recommended