கள்ளக்காதலனோடு வாழ, தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொன்றதாக கொடூர தாய் வாக்குமூலம்

  • 6 years ago
குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வருபவர் விஜய். தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் இவருக்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் என்ற 7 வயது மகனும் கார்னிகா என்ற 4 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பிய விஜய், வெளிப்புறம் சாத்தப்பட்டிருந்த வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியப்படி கட்டிலில் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Recommended