உலக நாடுகள் வியக்கும் மதுரை அமைச்சர் பெருமிதம்- வீடியோ

  • 6 years ago
மதுரை விரகனூர் சுற்று சாலையில் உள்ள தனியார் அரங்கில் 4 நாட்கள் நடைபெறும் பல முன்னணி நிறுவனங்களின் வைபரண்ட் தமிழ்நாடு என்ற உணவு பொருள் கண்காட்சி - வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்.

மதுரை புறநகர் விரகனூர் சுற்று சாலையில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் தலைவர் ராஜன் தலைமையில் வைபரண்ட் தமிழ்நாடு என்ற உணவு பொருள் கண்காட்சி இன்று துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஆச்சி மசாலா, மயில் மார்க் அரிசி, மதுரை சிந்தாமணி சாஸ்தா அப்பளம் உட்பட வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏராளமான முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் தயாரிப்புக்களை வெளிப்படுத்தினர். மதுரை, திண்டுக்கல், மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வருகை புரிந்து கண்காட்சியை பார்வையிட்டு பொருட்களை வாங்கி சென்றனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் வீர்ரகவராவ் மற்றும் மேலூர் , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், பெரியபுள்லான் உட்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். கண்காட்சியில் கலந்து கொண்ட கத்தார்,லண்டன் ஆகிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் உதயகுமார் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

: Revenue Minister Uthayakumar visited Vidambundi Tamilnadu Food Products Exhibition held at the private venue on the private venue in Vellaghanur Circuit Road in Madurai 4 days.

Recommended