கிடுகிடுவென உயர்ந்த பெரியார் அணையின் நீர்மட்டம்...மகிழ்ச்சியில் விவசாயிகள்- வீடியோ

  • 6 years ago
தொடர் மழையின் காரணமாக முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் மலமலவென உயர்ந்து 142 அடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையில் முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 138 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகள் மழை இன்றியதால் அணையின் நீர்மட்டம் மிக குறைவுடன் காணப்பட்ட நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் மலமலவென உயர்ந்துள்ளதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வருனபகவானின் கடை கண் பார்வையினால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையை கட்டிய ஜான் பென்னிக்குயிக் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கேரளாவில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவசாயிகள் தங்களின் அனுதாபங்களை தெரிவித்தனர்.

Des : Mullai Periyar Dam's water level rises to 142 feet due to continuous rain

Recommended