Skip to playerSkip to main content
  • 7 years ago
மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் செய்யும் நிலையை தமிழக அரசு ஒரு வருடத்திற்குள் உருவாக்கும் என்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பிரசவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் மருத்துவமனைகளில் 99 சதவீத பிரசவம் நடக்கிறது என்றார். இதை 100 சதவீதமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிலர் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றதுடன் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் பிரசவத்திற்கு பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டு இந்த ஆண்டு பிரசவத்திற்கு பயிற்சி பெற்ற 900 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் செய்யும் நிலையை ஓராண்டிற்குள் தமிழக அரசு உருவாக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Des : The Minister of Health said that the Tamil Nadu government will be responsible for the delivery of the child only in hospitals within a year and the awareness will be given to the public on the delivery of rural health nurses.

Category

🗞
News

Recommended