ஊராட்சி செயலாளருக்கு கத்தி குத்து- வீடியோ

  • 6 years ago
ஊராட்சி செயலாளர் கத்தியால் குத்திக்கொலை தம்பிக்கு போலீஸ் வலை வீ ச்சு.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள மருத்துவம்பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அவரது தம்பி ஏழுமலை என்பவருக்கும் குடிநீர் குழாயின் கழிவுநீர் செல்வதில் தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் இன்று காலை இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு அத்து அடிதடியாக மாறியுள்ளது இந்தநிலையில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை கத்தியால் வெங்கடேசனை வயிற்றில் குத்தியத்தில் அவர் குடல் சரிந்து கீழே விழுந்தார் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடன் தகவலறிந்த உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்ததுடன் வழக்குப்பத்திவுசெய்து தலைமறைவான ஏழுமலையை தேடிவருகின்றனர்.

Recommended