நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம் - உச்சநீதிமன்றம்

  • 6 years ago
இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோரி சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்றும், இதன் மூலம் கிராமப்புற மக்களும் வழக்கு விசாரணை குறித்து அறிந்து கொள்ள முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். உச்சநீதிமன்ற அறிவிப்புக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து நேரடி ஒளிபரப்பிற்கான வழிகாட்டு நெரிமுறைகளை வரும் ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended