கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன் குட்கா ஆலை கண்டறியப்பட்ட பின்னர் கோவை மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கோவை பொன்னையராஜபுரம் கிருஷ்ணா நகரில் உள்ள வீடு மற்றும் குடோனில் குட்கா பதுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மூன்று அறைகளில் 36 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மங்கள் சிங் என்பவரின் நிறுவனத்தில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் கோவையில் மட்டும் 3 இடங்களில் 2,500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv Facebook: https://www.fb.com/SathiyamNEWS Twitter: https://twitter.com/SathiyamNEWS Website: http://www.sathiyam.tv Google+: http://google.com/+SathiyamTV