நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த கிருஷ்டி ஃபிரைடு கிராம் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 5வது நாளாக சோதனை செய்தனர். இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர் புகார் வந்துள்ளது. அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை செய்து வருகிறது கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனம். தொடர் புகார் வந்ததால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. முதல் இரண்டு நாட்கள் சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரில் வருமான வரி சோதனை செய்தனர். அதேபோல் கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் எல்லாம் சோதனை நடந்தப்பட்டது. திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடந்தது. தற்போது 5 ஆம் நாளாக வருமானவரித் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் முறைகேடாக சம்பாதிக்கப்பட்ட 10 கிலோ தங்கம், 17 கோடி ரூபாய் ரொக்கம், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக 245 கோடி ரூபாய் டெபாசிட் செய்தது அம்பலம் ஆகியுள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv Facebook: https://www.fb.com/SathiyamNEWS Twitter: https://twitter.com/SathiyamNEWS Website: http://www.sathiyam.tv Google+: http://google.com/+SathiyamTV