பிரதமர் மோடி 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - 355 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்

  • 6 years ago
பெங்களூரை சேர்ந்த பீமப்பா கதாத் என்பவர் தகவல் அறியும் சட்டப்படி பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்களைக் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், 4 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 41 முறை வெளிநாட்டுப் பயணம் செய்து, 52 நாடுகளுக்குச் சென்று வந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பயணங்களுக்காக 355 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி மொத்தம் 165 நாட்கள் வெளிநாடுகளில் இருந்துள்ளார் என்றும் அதிகபட்சமாக கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளடக்கிய 9 நாடுகளுக்குச் சென்றுவந்ததற்கு 31கோடியே 25லட்சத்து 78ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended