அரசு வழங்கிய கிராம நத்தம் இடத்தை நீர் பிடிப்பு இடமாக மாற்றம் - ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவு

  • 6 years ago
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூரை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை சேர்ந்த 120 குடும்பங்களுக்கு ஒரே சர்வே எண்ணில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டன. இதில் 30 குடும்பங்களுக்கு மட்டும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பட்டா வழங்கப்பட்டது. இதனிடையே அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட கூடாது என்பதற்காக அப்போதைய ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சக்கரபாணி என்பவர் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் துணையுடன் அந்த கிராம நத்தமாக உள்ள இடத்தை நீர் பிடிப்பு இடமாக மாற்றியது தெரிய வந்துள்ளது. பட்டா வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், வீடுகளை அதிகாரிகள் அகற்றபோவதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். கிராம நத்தம் இடத்தை நீர் பிடிப்பு இடமாக மாற்றப்பட்டது எப்படி என்று விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவு

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended