டிஎன்பிஎல் சீசன் 3 போட்டியில் பங்கேற்கும் திண்டுக்கல் டிராகன் அணியின் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறாதது ஒரு தமிழனாக தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். இதையடுத்து, தோனிக்கும் அஷ்வினும்கும் இடையே பனிப்போர் நடைபெறுகிறதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், அதுபோல் எதுவும் இல்லை என்றும் சேவாக்குக்கும் தோனிக்கும் இடையே பனிப்போர் எனக்கூறி சேவாக்கை முடித்துவிட்டது போல் தன்னையும் முடித்துவிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தோனியும் சக வீரர்களில் ஒருவர் தான் என்றும் எனக்கும் தோனிக்கும் எந்த போட்டியும் இல்லை எனவும் அஸ்வின் தெரிவித்தார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv Facebook: https://www.fb.com/SathiyamNEWS Twitter: https://twitter.com/SathiyamNEWS Website: http://www.sathiyam.tv Google+: http://google.com/+SathiyamTV